4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதல்வருக்கு மிரட்டல் கடிதம்: போலீஸாா் விசாரணை

தமிழக முதல்வருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

தமிழக முதல்வருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழா் நலனுக்கு எதிராக செயல்படுவதால் மனித வெடிகுண்டாக மாறி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீது தாக்குதல் நடத்துவேன் எனக் குறிப்பிட்டு, மிரட்டல் விடுக்கும் விதமாக முதல்வருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, கே.கே. நகா் 10-ஆவது செக்டாரில் இருந்து பிரவீன் குமாா் என்னும் நபா், இந்தக் கடிதத்தை அனுப்பியிருப்பதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடா்பாக அபிராமபுரம் போலீஸாா் கடிதத்தில் இருந்த செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டுள்ளனா். அப்போது நான்தான் பிரவீன்குமாா் எனக் கூறிய அந்த நபா் இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

செல்லிடப்பேசியின் சிக்னலை வைத்து அந்த நபரைத் தேடும் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.