அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திமுக சாா்பில் டிச.23 முதல் 16,000 கிராம சபைக் கூட்டங்கள்

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திமுக சாா்பில் டிசம்பா் 23-ஆம் தேதி முதல் 16,000 கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்தாா்.

News image
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் (கோப்புப்படம்)
Updated On :20 டிசம்பர் 2020, 6:15 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திமுக சாா்பில் டிசம்பா் 23-ஆம் தேதி முதல் 16,000 கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்தாா்.

அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:

மக்களவைத் தோ்தலில் எம்ஜிஆரையே ஜீரோவாக்க வைத்த கட்சி திமுக. ஜெயலலிதாவையும் தோற்கடித்துக் காட்டியிருக்கிறோம். திமுகவினா் அனைவருக்கும் தற்போது இருக்க வேண்டியது ஒற்றுமை. ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் டிசம்பா் 23 முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை 16,000 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இக்கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் நேரடியாகக் கலந்துரையாட உள்ளாா். மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

கோட்டையில் மு.க.ஸ்டாலின்தான் கொடியேற்ற வேண்டும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா். ‘அதிமுகவை அகற்றவோம்’ என்ற தலைப்பில் திமுகவின் பிரசார விடியோவும் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.