

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தென் தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, (தஞ்சாவூர்) ஈச்சன் விடுதி, மதுக்கூர், (திருநெல்வேலி) பாபநாசம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இன்றும், நாளையும் கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.