டிச. 23 முதல் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

டிசம்பர் 23-ஆம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated on
1 min read

டிசம்பர் 23-ஆம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் டிசம்பர் 23-ஆம் தேதி முதல் நேரடி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்  கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதனைத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை பிரசாரத்தில் 16 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் தேர்தல் பிரசார விடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

அதிமுக அரசுக்கு எதிராக திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி ஆன்லைன் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com