தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சங்ககிரியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயற்குழுக்கூட்டம் 

சேலம் மாவட்டம், சங்ககிரி எடப்பாடி வட்டதிற்குள்பட்ட அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் செயற்குழுக்கூட்டம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
சங்ககிரி எடப்பாடி வட்டத்திற்குள்பட்ட போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் பேசுகிறார் அதன் தலைவர் கே.ரத்னம்.
Updated On :20 டிசம்பர் 2020, 9:50 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி எடப்பாடி வட்டதிற்குள்பட்ட அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் செயற்குழுக்கூட்டம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் கே.ரத்னம் தலைமை வகித்துப் ஓய்வுதியர்களுக்கு போக்குவரத்துறையின் சார்பில் வழங்க வேண்டிய பயன்களை எவ்வாறு விரைந்து பெறுவது குறித்து விளக்கிப் பேசினார். செயலர் எஸ்.கருப்பண்ணன் வரவேற்றார். 

சங்ககிரி எடப்பாடி வடத்தில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்படாமல் உள்ள பஞ்சப்படியை போக்குவரத்துறை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய ஒப்பந்த உயர்வுகளை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நிலுவைகளை வழங்க வேண்டும், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அனைத்து ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், சேலம் கோட்டத்தில் சம்பளத்தில் பிடித்தம் செய்த சேம நலநிதியை 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வழங்காமல் உள்ளதையும் மேலும் பணியில் இருக்கும் போது ஒப்படைப்பு செய்த ஈட்டிய விடுப்பிற்கான ஊதியம் 2009ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளதையும் வழங்க வேண்டும். 

விருப்ப ஓய்வில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள், பணியின் போது இறந்தவர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ. 3 லட்சத்தையும் போக்குவரத்துறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்புகளின் சார்பில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை கோட்ட அலுவலக வளாகம் முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.