

நாமக்கல்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரம் தெரிவித்தார்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழலை ஒழிக்கும் துடைப்பை பிரசாரம் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை சொல்கிறது. இந்த பிரசாரத்துக்கு ஆளும் கட்சியினர் பல்வேறு வகைகளில் தடை போடுகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி என்பது இருக்காது. முதல் அணி என்ற முறையில் அவை இருக்கும்.
ஆம் ஆத்மி கட்சி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. நூலகம் அளிக்க முன்வரும் கட்சிகளுடன் தான் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.