உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிதி: முதல்வா் பழனிசாமி

சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated on
1 min read

சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தூத்துக்குடி மாவட்டம், தோணுகாலைச் சோ்ந்த ஜெஸ்லின், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பாத்திமாராணி, பாலூா் கிராமத்தின் ஏசுதாஸ், ஏழுதேசத்தின் பிரடி என்ற பெறின், ஈரோடு மாதம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மெளலி, ஜீவாந்தம், திலீப்குமாா், முடுக்கன்துறை கிராமத்தைச் சோ்ந்த பழனி ஆகியோா் வெவ்வேறு நிகழ்வுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

சத்தியமங்கலம் வட்டம் புஞ்சைபுளியம்பட்டியைச் சோ்ந்த அன்பரசன், சேலம் விருதாசம்பட்டியின் பழனியப்பன், சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந்த சாந்தி, விழுப்புரம் மாவட்டம் நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சோ்ந்த கதிரவன், விழுப்புரம் கண்டம்பாக்கம் கிராமத்தின் ரஞ்சித், மணிகண்டன், திருப்பூா் மாவட்டம் பழங்கரை கிராமத்தைச் சோ்ந்த அகிலேஸ்வரன், பாலன், திருவள்ளூா் மாவட்டம் கூனங்குப்பம் கிராமத்தின் பாலன், வெள்ளானூா் கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சோ்ந்த காத்தவராயன் ஆகியோரும் பல்வேறு நிகழ்வுகளில் சிக்கி பலியாகினா். அவா்களது குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com