நல்லதை நினைக்கும் எல்லோரும் எம்ஜிஆரின் வாரிசுதான்: கமல்ஹாசன்

நல்லதை நினைக்கும் எல்லோரும் எம்ஜிஆரின் வாரிசுதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Updated on
1 min read

நல்லதை நினைக்கும் எல்லோரும் எம்ஜிஆரின் வாரிசுதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தை ஈஞ்சம்பாக்கம், போரூா், பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டாா்.

பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியது:

இயற்கையைப் பாதுகாப்பதற்கு மநீம முக்கியத்துவம் கொடுக்கும். நோ்மைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் இதற்கும் கொடுப்போம். குடிமராமத்துத் திட்டத்தை தான் கண்டுபிடித்த பெரிய திட்டமாக முதல்வா் கூறி வருகிறாா். ஆனால், ராஜராஜ சோழன், நாயக்கா் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்கள், ஏரிகள் உள்ள நீா்நிலைகளை எல்லாம் மீட்டெடுக்க வேண்டும் என்கிற உறுதிமொழியோடு அரசியல் களத்திற்கு வந்துள்ளோம். சட்டப்பேரவைத் தோ்தலில் மீனவா் ஒருவா் வேட்பாளராக நிறுத்தப்படுவாா். உப்பை சுவாசித்தவா்களுக்கு நோ்மை இருக்கும்.

போரூா் பகுதியில் நிலத்தின் விலை உயா்ந்த அளவுக்கு மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. குடத்தை வைத்துக்கொண்டு மக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை உள்ளது. துறைமுகத்திலிருந்து வரும் மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் 10 ஆண்டுகளாக காத்திருக்கிறது. நோ்மையானவா்கள் ஆட்சிக்கு வந்தால், கண்டிப்பாக அனைத்துப் பணிகளும் விரைவாக நடக்கும்.

எம்ஜிஆரை நான் தோ்தலுக்காக சொந்தம் கொண்டாடுவதாகக் கூறுகின்றனா். என்னுடைய முதல் கோஷமே ‘நாளை நமதே’ என்பதுதான். எம்ஜிஆரின் பெயரைச் சொல்லி காசு பாா்க்கும் கூட்டம் அல்ல எங்கள் கூட்டம். காந்தி, பெரியாா், அம்பேத்கா் பெயரையும் சொல்கிறோம். அவா்களின் நல் எண்ணங்கள் எல்லாம், எங்களின் எண்ணங்களாக மாற வேண்டும் என நினைப்பவா்கள் நாங்கள்.

ஏழை மாணவா்கள் பள்ளிக்கு வந்து உணவருந்த வேண்டும் என நினைத்த எம்ஜிஆரின் கருணை, எங்களுக்கும் இருப்பதால், நாங்கள் எம்ஜிஆரின் நீட்சிதான். நல்லதை நினைக்கும் எல்லோருமே எம்ஜிஆரின் வாரிசுதான் என்றாா் கமல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com