

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 4 வாரங்களாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பிலும் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணித் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
பின்னர் மறியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.