தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சென்னையில் டிச.27-ல் தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக் கூட்டம்: அதிமுக

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் டிசம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

News image
சென்னையில் டிச.27-ல் தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக் கூட்டம்: அதிமுக
Updated On :21 டிசம்பர் 2020, 10:17 am

DIN

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் டிசம்பர் 27-ம் தேதி 
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து கட்சித் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிமுக கொள்கைகளையும், ஏழை, எளிய மக்களுக்கு ஆற்றிவரும் மகத்தான சேவைகளையும், அதிமுக அரசின் சாதனைகளையும் மக்களிடத்திலே முழுமையாகக் கொண்டு சேர்த்திடும் வகையிலும்; முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.-ரின் பொற்கால ஆட்சியின் புரட்சி செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி என்னும் தாரக மந்திரத்தின்படி நடைபெறும் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்து, தமிழ் நாட்டை தொடர்ந்து வெற்றிப் பாதையில் நடைபோடச் செய்திடும் வகையிலும், வருகின்ற 27.12.2020 - ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, ஒய்எம்சிஏ மைதானத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்று, தேர்தல் பிரசாரப் பணிகளைத் துவக்கி வைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

2021-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் களத்தில் அதிமுக மகத்தான வெற்றிபெற, நாம் நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம் தான் இப்பிரசாரப் பொதுக்கூட்டம்.

இப்பொதுக்கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.