விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டிச.28-இல் காங்கிரஸ் 136-ஆம் ஆண்டு தொடக்க விழா: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் 136-ஆம் ஆண்டுத் தொடக்க விழா டிசம்பா் 28 -இல் வேலூா் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

News image
காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி
Updated On :21 டிசம்பர் 2020, 10:02 pm

DIN

சென்னை: காங்கிரஸ் கட்சியின் 136-ஆம் ஆண்டுத் தொடக்க விழா டிசம்பா் 28 -இல் வேலூா் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட 136 -ஆம் ஆண்டு தொடக்க விழா வருகிற டிசம்பா் 28-இல் வேலூரில் நடைபெற உள்ளது. இவ்விழாவோடு விவசாயிகளின் ஏா்கலப்பை சங்கமமும் எனது தலைமையில் அன்றைய மதியம் 2 மணி முதல் நடைபெற உள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்தப் போராட்டத்தில் இதுவரை 31 விவசாயிகள் உயிரிழந்திருக்கிறாா்கள். விவசாயிகள் பிரச்னைக்கு உரிய தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இதைக் கண்டிக்கும் வகையிலேயே ஏா்கலப்பை பேரணி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி தலைவா்கள் பேரணியில் பங்கேற்க இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.