இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊத்தங்கரையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Updated On :22 டிசம்பர் 2020, 9:05 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி. தேவேந்திரன், வடக்கு வி. வேடி, நகரச் செயலாளர் பி.கே. சிவானந்தம், மாவட்ட மருத்துவரணி செயலாளர் என். இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் நியமனம் குறித்தும், வருகின்ற சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இதில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் கே .ஆர் .எஸ் வேடியப்பன் ,இளம் பாசறை மாவட்ட செயலாளர் முரளி பிரசாத், மாவட்ட துணைச் செயலாளர் ரேவதி, மாவட்ட மகளிர் அணி பொருளாளர் நிர்மலா, சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் பசீர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் விஜயகுமார், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சிக்னல் ஆறுமுகம், சக்திவேல் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.