ஹைவேவிஸ் மலைச்சாலையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு
சின்னமனூர் வனத்துறையினர் மலைச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.


தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை நெடுஞ்சாலையில் சமீபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைக்குட்டி உயிரிழந்ததையடுத்து சின்னமனூர் வனத்துறையினர் மலைச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
மேற்குத்தொடர்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியானது அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தைப்புலி, புலி,யானை, கருஞ்சிறுத்தை, சாம்பல் நிற அணில், சிங்கவால் குரங்கு என பல்வேறு வனவிலங்குகள் வசிப்பிடமாக இருந்து வருகிறது. யுனஸ்கோ நிறுவனம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள முக்கிய மலைப் பிரதேசம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஊட்டி, கொடைக்கானல், மூணாறு பகுதிகளில் நிலவு தட்பவெப்ப நிலை மற்றும் இயற்கை அழகு, தேயிலைத்தோட்டங்கள், வானுயர்ந்து மரங்கள், நீர் நிலைகள், அணைக்கட்டுகள், பள்ளத்தாக்குகள், மலைக்குன்றுகள் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவர்ந்து இழுக்கிறது. தேனி உள்பட தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மலைச்சாலையில் செல்ல நேரக்கட்டுப்பாடு:
ஹைவேவிஸ் நெடுஞ்சாலையில் 50 கிலோ மீட்டர் தூரம் வரையில் மலைக்கிடையே சாலை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே அனைத்து வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கம். இதனால் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் நேரம் கட்டுப்பாட்டு அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் மலைச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வயது சிறுத்தைக்குட்டி உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து, மலைச்சாலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி. இதனை மீறி நெடுஞ்சாலையில் செல்லும் தனியார் வானங்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சின்னமனூர் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், அரசு வாகனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...