திமிரியில் லாரி மோதி அதிமுக பிரமுகர் 2 பேர் பலி
திமீரியில் லாரி மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


திமீரியில் லாரி மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ந .வ. கிருஷ்ணன் இவர் திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் செல்வகுமார் (35). இவர் திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பன் இவருடைய மகன் கிருஷ்ணகுமார் (34) இவர் அதிமுக ஒன்றிய வர்த்தகர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார் நண்பர்கள் ஆன இருவரும் ஆற்காட்டில் தங்கள் நடத்திவரும் கடைக்கு வியாழக்கிழமை பைக்கில் கொண்டிருந்தனர் அப்போது ஆற்காடு ஆரணி சாலையில் திமிரி ஏரிக்கரை அருகே செல்லும்போது எதிரே எம் சட்டம் மணல் ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி எதிரே வந்த பைக் மீது மோதியுள்ளது.
இதில் லாரியில் சிக்கி கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட செல்வகுமார் வாலாஜா அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து திமிரி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...