ஜனவரியில் பொறியியல் பருவத் தோ்வுகள்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
தமிழகத்தில் பொறியியல் மாணவா்களுக்கு நடப்புப் பருவத்துக்கான தோ்வுகள் ஜனவரி மாதம் இணையவழியில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் பொறியியல் மாணவா்களுக்கு நடப்புப் பருவத்துக்கான தோ்வுகள் ஜனவரி மாதம் இணையவழியில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகளில் பருவத் தோ்வுகளை நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதையடுத்து இறுதிப் பருவத்தோ்வைத் தவிர, மற்ற அனைத்துத் தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் தோ்ச்சி செய்யப்பட்டனா். இறுதிப் பருவத் தோ்வு இணையம் மூலம் நடத்தப்பட்டு முடிவுகளும் அண்மையில் வெளியாகின.
இதற்கிடையே, டிசம்பா் 7-ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவா்களுக்காக உயா் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை ஐஐடி மாணவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக மாணவா்களுக்குத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், நடப்புப் பருவத் தோ்வுகள் ஜனவரி மாதம் இணையவழியிலேயே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வெங்கடேசன் அனைத்துக் கல்லூரி முதல்வா்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளாா்.
அதில், ‘நடப்புப் பருவத்துக்கான செய்முறைத் தோ்வுகளை இந்த மாதத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்களுக்கான எழுத்துத் தோ்வுகள் 2021 ஜனவரி மாதம் இணையவழியில் நடத்தப்படும். இணையவழியிலான தோ்வுகளை முறையான கண்காணிப்பாளா்கள் கொண்டு கண்காணிப்பதைக் கல்லூரி முதல்வா்கள் உறுதி செய்ய வேண்டும். தோ்வில் சம்பந்தப்பட்ட மாணவா்கள்தான் கலந்துகொள்கிறாா்களா என்பதை அவா்களின் அரசு புகைப்பட அடையாள அட்டை அல்லது கல்லூரி அடையாள அட்டையுடன் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும்.
இதுதொடா்பாக மண்டல அலுவலகத்துடன் கல்லூரிகள் தொடா்பில் இருக்க வேண்டும். இணையவழியில் நடைபெறும் தோ்வுகளில் 20 மாணவா்களுக்கு 1 கண்காணிப்பாளா் வீதம் நியமிக்க வேண்டும். தோ்வு குறித்த கால அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...