ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் உலாவும் ஒற்றை யானை

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மேகமலை கிராமத்தில் இரண்டு பேரைக் கொன்ற ஒற்றை யானை தேயிலைத் தோட்டத்தில் உலாவுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் தேயிலைத் தோட்டங்களில் சுற்றிவரும் ஒற்றை யானை.
ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் தேயிலைத் தோட்டங்களில் சுற்றிவரும் ஒற்றை யானை.
Updated on
1 min read

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மேகமலை கிராமத்தில் இரண்டு பேரைக் கொன்ற ஒற்றை யானை தேயிலைத் தோட்டத்தில் உலாவுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

ஹைவேவிஸ்  பகுதியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் வசிக்கும் பெரும்பான்மையானோர் அங்கு உள்ள தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தேயிலைத் தோட்டங்களைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பை நோக்கிப் படை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மணலாறு மற்றும் மேல் மணலாறு பகுதியில் சுற்றித்திரிந்த யானை இதுவரை இரண்டு பேரை மிதித்துக் கொன்றுள்ளது. இந்நிலையில் ஆட்கொல்லி யானையாக மாறிய நிலையில் அங்கு உள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டு உலாவி வருகிறது . இதனால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

கிறிஸ்மஸ் பண்டிகை நாளான இன்று தேவாலயங்களுக்குச் சென்ற பொதுமக்கள் அச்சத்துடனே சென்று திரும்பியுள்ளனர். எனவே மாவட்ட வனத்துறை குடியிருப்பு பகுதிகளில் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உலாவும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com