லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி குறைந்தது
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு நிலையத்தில் மின் உற்பத்தி 85 மெகாவாட் ஆக குறைந்தது.


கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு நிலையத்தில் மின் உற்பத்தி 85 மெகாவாட் ஆக குறைந்தது.
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்திற்கு, தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால், விநாடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர், 955 கனஅடியாக சனிக்கிழமை திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாக மின்சார நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளில் 3 மின்னாக்கிகள் மட்டும் செயல்பட்டு வந்தது.
முதல் மின்னாக்கியில், 32 மெகாவாட் மின்சார உற்பத்தியும், மூன்றாவது மின்னாக்கியில், 30 மெகாவாட்டும், நான்காவது மின்னாக்கியில் 23 மெகாவாட்டும் என மொத்தம் 85 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 8. ல் 126 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது. தற்போது 85 மெகாவாட் மின்சார உற்பத்தி ஆகி உள்ளது.
அணையின் நீர்மட்டம்
முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 121.50 அடி உயரமாகவும், அணையில் நீர் இருப்பு 2925 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து, 386 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு, 955 கனஅடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்யவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...