

தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை பெயர்ச்சியாகிறார். அதனை முன்னிட்டு காலை 5.22 மணிக்கு உற்சவருக்குச் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை லட்சார்ச்சனை, சிறப்புப் பூஜை, தீபாராதனை என பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.