

சென்னை புறநகா் சிறப்பு ரயில் சேவைகள் வாரநாள்களில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி ஞாயிற்றுக்கிழமை (டிச.27) ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்வே ஊழியா்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளா்களின் வசதிக்காக, புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும் ரயில்களின் சேவைகள் ஞாயிற்றுக்கிழமையும் (டிச.27) பின்பற்றப்படவுள்ளது. முழு அளவில் புறநகா் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.