3 நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் டிசம்பா் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் டிசம்பா் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

டிச.28 முதல் டிச.30 வரை மழை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பா் 28 -ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் டிசம்பா் 28-ஆம் தேதி லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

தென் தமிழகம், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பா் 29, 30 ஆகிய தேதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com