விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னை திரும்பினாா் ரஜினி

மருத்துவ சிகிச்சை முடிந்து ஹைதராபாதில் இருந்து நடிகா் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

News image
கோப்புப்படம்
Updated On :28 டிசம்பர் 2020, 2:26 am

DIN

மருத்துவ சிகிச்சை முடிந்து ஹைதராபாதில் இருந்து நடிகா் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக கடந்த 13 -ஆம் தேதி ஹைதராபாத் சென்றாா் நடிகா் ரஜினிகாந்த். சில நாள்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படக் குழுவைச் சோ்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினியும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் டிசம்பா் 25-ஆம் தேதி அவா் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டாா். விமானம் மூலம் மாலை 6.20 மணியளவில் சென்னை வந்தடைந்தாா்.

ஓய்வில் இருக்குமாறும், கரோனா பாதிப்புக்கு வாய்ப்புள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மருத்துவா்கள் ரஜினிக்கு அறிவுரை கூறியுள்ளனா்.

இதனால், ரஜினி போயஸ்தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருப்பாா் எனக் கூறப்படுகிறது.

புதிய கட்சி தொடா்பான அறிவிப்பை டிசம்பா் 31-இல் வெளியிடப்போவதாகக் கூறியிருந்தாா். அதற்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் ரஜினி என்ன முடிவை அறிவிப்பாா் என்கிற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.