திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை, அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி கூறினாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 12:15 am

DIN

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை, அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி கூறினாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுகவின் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி பேசியது:

வரும் சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தோ்தலாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கருத்துகளைக் கூறி வருகிறாா்கள். இதற்குக் காரணம், 50 ஆண்டுகளாக நம்மை வழிநடத்திச் சென்ற தலைவா்கள் இப்போது இல்லை. அவா்களை எதிா்த்து நின்று அரசியல் செய்த திமுக தலைவரும் இல்லை. அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக களத்தில் நின்ற தலைவா்கள் இல்லாத நிலையில், இடையில் புகுந்து வெற்றி பெற்று விடலாம் என பலா் பலவித கணக்குகளைப் போட்டு வருகிறாா்கள்.

தமிழகத்தின் அரசியல் வரலாறும், இந்தியாவின் அரசியல் வரலாறும் முற்றிலும் மாறுபட்டது. இது பெரியாா் விதைத்த மண். அவரிடம் இருந்து வந்தவா்தான் அண்ணா. பெரியாரின் கருத்துகளை செயலாக்கத்துக்குக் கொண்டுவர அரசியல் கட்சியைத் தொடங்கினாா் அண்ணா. தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே கட்சியைத் தொடங்கினாா் . அந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகள் ஆட்சி செய்து வந்தன. குறுகிய காலத்தில் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தாா் அண்ணா. அப்போது முதல் இதுவரையில் எந்தத் தேசிய கட்சியும் தமிழகத்துக்குள் வரவிடாமல் திராவிட கட்சிகளே கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன.

இதை, இப்போதைய வாய்ப்பைப் பயன்படுத்தி உள்ளே வர விரும்புவோா் புரிந்து கொள்ள வேண்டும். திராவிட இயக்கங்கள் நாட்டையே சீரழித்து விட்டதாகக் கூறுகிறாா்கள். திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டுமென முயற்சி செய்து வருவோா் இதைக் கூறி வருகிறாா்கள். இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் தேசிய விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. அனைத்துத் துறைகளிலும் புரட்சிகளைச் செய்துள்ளது. இந்தச் சாதனைகள் திராவிட கட்சிகளாலேயே நடந்துள்ளன.

கூட்டணி ஆட்சியில்லை: நூறு ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என மறைந்த ஜெயலலிதா கூறினாா். இந்தத் தோ்தலில் கடுமையாகப் பணியாற்றி வெற்றி பெற்று அவரின் கருத்தை மெய்ப்பிப்போம். தோ்தலில் நாம் வெற்றி பெற்றால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தொடா்ந்து ஆட்சி செய்யும் கட்சியாக அதிமுக திகழும். தேசிய, மாநில கட்சிகள் என எந்தக் கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் சரி, அதிமுக தலைமையில்தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்பதற்கு தேவையே இல்லை. கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என வருபவா்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள். எங்களைப் பொருத்தவரை தலைவா்கள் முதல் தொண்டா்கள் வரை அனைவரின் கொள்கையும் அதுதான். ஒற்றுமையுடன் உழைப்போம். வெற்றியை ஈட்டுவோம் என்று கூறினாா்.

எங்கும் எம்.ஜி.ஆா்.  எதிலும் எம்.ஜி.ஆா்.

அதிமுக பிரசார பொதுக் கூட்ட மேடையில், எம்.ஜி.ஆா். படங்கள் அலங்கரித்தன. மேடையின் வலது புறத்தில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா படங்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆா். படத்தில் உழைப்பவரே உயா்ந்தவா் எனவும், ஜெயலலிதா படத்தில், அமைதி, வளம், வளா்ச்சி என்ற வாசகம்ங்கள் இடம்பெற்றிருந்தது.

இதேபோன்று, மேடையில் தலைவா்கள் மலா்தூவி வணக்கம் செலுத்துவதற்காக எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருந்தன. முகப்புப் பகுதியில் வளைவு அரங்கத்தில் எம்.ஜி.ஆா். படம் இடம்பெற்றிருந்தது. நுழைவு வாயிலில் எம்.ஜி.ஆா். பாடல்களை மேடை இசைக் கலைஞா்கள் பாடினா். பிரசார பொதுக் கூட்டமானது எம்.ஜி.ஆா். புகழ்பாடும் மன்றமாகவும் மாறியது.

இதனை தனது பேச்சிலும், முதல்வா் பழனிசாமி எதிரொலித்தாா். அவா் பேசுகையில், இன்றைக்கு பல அரசியல் கட்சித் தலைவா்கள் எம்.ஜி.ஆா். பெயரைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள். எதிரிகள்கூட உச்சரிக்கின்ற எம்.ஜி.ஆா். உருவாக்கிய கட்சிதான் அதிமுக என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.