திருச்சிக்கு முதல்வர் வருகை: 2 நாள் தேர்தல் பிரசாரம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, திருச்சிக்கு புதன்கிழமை காலை 11.30 மணிக்கு வருகை தரவுள்ளார். 
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, திருச்சிக்கு புதன்கிழமை காலை 11.30 மணிக்கு வருகை தரவுள்ளார்.

நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு வருகை தரும் முதல்வருக்கு, மாவட்ட எல்லையான மேய்க்கல்நாயக்கன்பட்டியில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தொட்டியத்தில் வாழைத் தோட்டங்களை பார்வையிட்டு விவசாயிகள், தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், பாக்குத் தோட்டப் பண்ணைகளையும் பார்வையிட்டு தொழிலாளர்களுடன் பேசுகிறார்.

கண்ணனூர் கிராமத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு மண்ணச்சநல்லூரில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் சந்திப்பு, லால்குடி, புள்ளம்பாடியில் கட்சியினர், பொதுமக்களுடன் சந்திப்பு, திருச்சியில் கட்சியினர், அமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு, முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு என முதல்நாள் (புதன்கிழமை) நிகழ்வுகளை இரவு 9.30 மணிக்கு நிறைவு செய்கிறார்.

2ஆவது நாளான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு திருவரங்கத்தில் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சந்தையில் பொதுமக்கள், வணிகர்களை சந்தித்து பேசுகிறார். 

பின்னர், காலை 9.30 மணிக்கு சோமரசம்பேட்டையில் மகளிர் குழுக்களை சந்தித்துப் பேசுகிறார். 10 மணிக்கு மறவனூரில் வரவேற்பு, 11.30 மணிக்கு மணப்பாறை பேருந்துநிலையத்தில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். 12.30 மணிக்கு காவல்காரன்பட்டியின் கட்சியின் நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் சந்திப்பு, மாலை 3 மணிக்கு சிறு, குறு தொழில் முனைவோருடன் சந்திப்பு, மாலை 4 மணிக்கு திருச்சியில் வட்டா பிரமுகர்கள், பொதுமக்களுடன் சந்திப்பு, மாலை 5 மணிக்கு வணிகர்கள், தொழிலதிபர்கள், வழக்குரைஞர்களுடன் கலந்துரையாடல், 6.40 மணிக்கு சாலை மார்க்கமாக மக்கள் சந்திப்பு, 7.30 மணிக்கு பொதுக் கூட்டம், 8 மணிக்கு நத்தர்ஷா பள்ளிவசாலில் வழிபாடு, முக்கிய பிரமுகர்களை சந்தித்து பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com