

சென்னை: புத்தாண்டு தினத்தில் என்னைச் சந்திக்க யாரும் நேரில் வரவேண்டாம் என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று உடல் நலமடைந்து தற்போது என் சொந்த கிராமத்தில் தங்கியிருக்கிறேன்.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் என்னை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
விரைவில் இயக்கப் பணிகளில் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தேசியத் தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.