திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து மக்கள் கட்சியினர்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள அரண்மனை குளத்திற்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.


திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள அரண்மனை குளத்திற்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ரவி பாலன் கூறியதாவது:
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பேகம்பூர் பகுதியில் மதுரை சாலையில் உள்ள அரண்மனை குளம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில் மாநகராட்சி நிர்வாகம் ஆஜராகவில்லை.
இதன் காரணமாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பினை எதிர்த்து மாநகராட்சி நிர்வாகம் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. அந்த தீர்ப்பை ரத்து செய்வதற்கு அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படாத நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில் நிதி திரட்டி மேல்முறையீட்டு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...