கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அடுத்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானது: மக்களே உஷார்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறப் போவதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

News image

water063247

Updated On :27 பிப்ரவரி 2020, 10:58 am


சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி வெளியிட்ட அறிவிப்பில், இன்று மாலை முதல் குடிநீர் ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம்  அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவால் குடிநீர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், பொதுமக்கள் தேவைக்காக மட்டுமே நீரை எடுக்கிறோம் என்றும் முரளி தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றத் தேவைக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் குடிநீருக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் ஒருசேரப் பார்க்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.