தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லி வன்முறையை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 11:23 am

DIN

தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது இரு மதத்தினருக்கு இடையிலான வன்முறையாக மாறியதால் பெரும் கலவரம் மூண்டது. இதில் ஏராளமான வாகனங்கள், கடைகள், வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. 

வன்முறைச் சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தில்லி வன்முறையை கண்டித்து சென்னை பவர்ஹவுஸ் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும், தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் தில்லி வன்முறைக்கு காரணமான கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.