மெரீனாவில் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடிய சென்னை காவல் ஆணையர் விசுவநாதன்

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று நள்ளிரவு, சென்னை பெருநகர காவல் ஆணையர் விசுவநாதன் கேக் வெட்டி, பொதுமக்களுடன் புத்தாண்டைக் கொண்டாடினார்.
மெரீனாவில் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடிய சென்னை காவல் ஆணையர் விசுவநாதன்
Updated on
1 min read


சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று நள்ளிரவு, சென்னை பெருநகர காவல் ஆணையர் விசுவநாதன் கேக் வெட்டி, பொதுமக்களுடன் புத்தாண்டைக் கொண்டாடினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன், உத்தரவின்பேரில், புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் நேற்று இரவு மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் நள்ளிரவு 12.00 மணிக்கு அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகளுக்கு கேக் ஊட்டி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து காவலன் செயலி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com