ஆத்தூர் அருகே கார்-லாரி மோதி விபத்து: 3 பேர் பலி
சேலம் ஆத்தூர் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது காரும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில், சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரியும் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
சேலம் ஆத்தூர் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது காரும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
கார் ஓட்டுநர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...