பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சென்னை மாநகர காவல் ஆணையரிடம் காணொலி அழைப்பில் புகார் அளிக்கும் வசதி தொடக்கம்

காணொலி அழைப்பு மூலம் வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image
காணொலி அழைப்பில் புகார் அளிக்கும் வசதி அறிமுகம்
Updated On :3 ஜூலை 2020, 12:08 pm

DIN

காணொலி அழைப்பு மூலம் வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரா காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், செல்லிடப்பேசி காணொலி காட்சி மூலமாக பொது மக்கள் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து, சென்னை பெருநகரில் கரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற கட் செவி (வாட்ஸ் அப்) எண்ணில் காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களில் மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணி வரை புகார் தெரிவித்து பயனடையலாம் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, (03.07.2020) வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணிவரை மேற்கண்ட கட்செவி (வாட்ஸ்அப்) எண்ணில் காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

பொதுமக்கள் காணொளி மூலம் புகார் தெரிவித்து பயனடையும் படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.