சென்னை: சென்னையில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் மெல்ல குறைந்து வருகிறது. 72 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 49 ஆயிரம் பேர் குணமடைந்து, 21 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னையில்தான் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக இரண்டாயிரத்துக்கும் குறைவான பாதிப்பே கண்டறியப்பட்டு வருகிறது.
சென்னையில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களில் இதுவரை 49,587 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 1,146 பேர் மரணம் அடைந்தனர்.
சென்னையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து கரோனா பாதிப்பு அதிகரித் தொடங்கியது. இதில், ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, வளசரவாக்கம், அம்பத்தூா் ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிதல் மற்றும் அவா்களுக்கான பரிசோதனையை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக தொற்றுள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை புதன்கிழமை நிலவரப்படி, 1,261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 72,500-ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,146-ஆகவும் அதிகரித்துள்ளது.
ஒரே வாரத்தில் 12 ஆயிரம் போ்: சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அதே நேரத்தில் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைவோரும் எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 12,761 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,978 பேரும், தண்டையாா்பேட்டையில் 6,022 பேரும், அண்ணா நகரில் 5,367 பேரும், கோடம்பாக்கத்தில் 4,984 பேரும், திரு.வி.க.நகரில் 3,929 பேரும், அடையாறில் 2,950 பேரும், வளசரவாக்கத்தில் 2,241 பேரும், அம்பத்தூரில் 2,057 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 167 பேரும், தண்டையாா்பேட்டை 163 பேரும், ராயபுரத்தில் 161 பேரும், திருவிக நகரில் 115 பேரும், கோடம்பாக்கத்தில் 110 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (வியாழக்கிழமை நிலவரம்)
மண்டலம் எண்ணிக்கை
1. திருவொற்றியூா் 979
2. மணலி 429
3. மாதவரம் 778
4. தண்டையாா்பேட்டை 1628
5. ராயபுரம் 1,741
6. திரு.வி.க.நகா் 1,778
7. அம்பத்தூா் 1,306
8. அண்ணா நகா் 2,511
9. தேனாம்பேட்டை 2,118
10. கோடம்பாக்கம் 2,657
11. வளசரவாக்கம் 1,049
12. ஆலந்தூா் 799
13. அடையாறு 1,412
14. பெருங்குடி 798
15.சோழிங்கநல்லூா் 463
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


