அதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அவர் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், "பல்கலைக்கழகங்களில் சாத்தியக்கூறுகளை பொருத்து வழக்கமான நடைமுறையிலோ, இணையவழியிலோ, அல்லது இரண்டையும் பின்பற்றியோ செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படவேண்டும். இந்தத் தேர்வுகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்தப்படவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வுகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.