வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாத்தான்குளம் சம்பவம்: காவலர்களை நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான 5 போலீஸாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
சாத்தான்குளம் கொலை சம்பவம்
Updated On :13 ஜூலை 2020, 12:16 pm

DIN

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ காவலில் எடுக்கக்கோரிய 5 போலீஸாரை நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீஸார் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, நீதிமன்றத்தின் அறிவுரைப்படி சிபிசிஐடி சில நாள்கள் இந்த வழக்கை விசாரித்துவந்த நிலையில், தற்போது சிபிஐ இவ்வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. 

அதன்படி, இந்த வழக்கில் கைதான 5 போலீஸாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், 5 போலீஸாரையும் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிபிஐ அளித்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.