சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் தற்கொலை
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றி வந்த இளம் மருத்துவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றி வந்த இளம் மருத்துவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவம் பயின்று வந்த கண்ணன் (25), இன்று காலை ஸ்டான்லி மருத்துவமனைக் கட்டடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது தற்கொலை குறித்து ஏழு கிணறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தங்கியிருந்த அறை மாடியில் இருந்து குதித்து இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கரோனா வார்டில் பணியாற்றி வந்த கண்ணன், நேற்று இரவு 9.30 மணி வரை பணியில் இருந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவரது சொந்த ஊர் உடுமலைப்பேட்டை, அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...