மின் கட்டணம் விவகாரம்: மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.


மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா். அதில், மின்கட்டணக் குழப்பங்களைத் தீா்க்க வலியுறுத்தி ஜூலை 21-இல் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் கறுப்புக்கொடி ஏற்றியும் கையில் கருப்புக்கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார். இதேபோல் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலினும், சிஐடி காலனியில் கனிமொழியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழகத்ததின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர், தமிழக அரசின் மின் கட்டணத்தை கண்டித்தும், கணக்கு எடுப்பதில் உள்ள குழப்பங்களை நீக்கி மின் நுகா்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு, பொது முடக்க காலத்தில் மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். குறிப்பாக முந்தைய மாதத்துக்குச் செலுத்திய மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு பதில் அந்தத் தொகைக்கு உரிய யூனிட்களை கழிக்க வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...