வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கொடைக்கானலில் செல்லிடப்பேசி வாங்கித் தராததால் மாணவி தைலம் குடித்து தற்கொலை

கொடைக்கானல் அருகே செல்லிடப்பேசி வாங்கி தராத விரக்தியில் பள்ளி மாணவி தைலம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கொடைக்கானலில் மாணவி தைலம் குடித்து தற்கொலை
Updated On :21 ஜூலை 2020, 10:53 am

DIN

கொடைக்கானல் அருகே செல்லிடப்பேசி வாங்கி தராத விரக்தியில் பள்ளி மாணவி தைலம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சண்முகப்ரியா(16). இவர் அதே பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10−ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்பு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அரசு அறிவித்தபடி  பாடம் படிப்பதற்கு ஆன்லைன் மூலம் படிப்பதற்காக செல்லிடப்பேசி தேவைப்பட்டது. இதற்கு தனது பெற்றோரிடம் செல்லிடப்பேசி கேட்டுள்ளார்.

செல்லிடப்பேசி வாங்கித்தர இயலாததால் மனம் உடைந்த மாணவி சண்முகப்ரியா வீட்டிலிருந்த தடைப்பட்ட வின்டர்கிரீன் சிவப்பு தைலத்தைக் குடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்குச் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து பன்னீர் செல்வம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.