கன்னியாகுமரி அருகே மது போதையில் நண்பனைக் கொன்ற இருவர் கைது
கன்னியாகுமரி அருகே கோவளத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்த இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


கன்னியாகுமரி அருகே கோவளத்தில் மதுபோதையில் நண்பனைக் கொலை செய்த இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தைச் சேர்ந்தவர் ரதீஸ்டன் (33) மீனவர். இவருக்கு சரோஜினி (32) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், ரதீஸ்டன் செவ்வாய்க்கிழமை இரவு கோவளம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நிர்மல் (37), வசந்த் (35) ஆகியோருடன் சேர்ந்து வீட்டின் அருகே மது அருந்தியுள்ளார். மதுபோதை அதிகமானதும் மூவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த நிர்மல், வசந்த் இருவரும் ரதீஸ்டனை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ரதீஸ்டனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மயக்க நிலையில் இருந்த அவரை இருவரும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்தனராம்.
இந்நிலையில் புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் ரதீஸ்டன் எழுந்திருக்காததால், சந்தேகமடைந்த அவரது மனைவி சரோஜினி கணவனை எழுப்பியுள்ளார். அப்போது அவர் இறந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரும், குழந்தைகளும் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சரோஜினி புகார் அளித்தார்.
கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளர் ஆவுடையப்பன் இருவரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதனிடையே நிர்மல் மற்றும் வசந்த் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸார் ரதீஸ்டன் சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...