சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

நாள்தோறும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது
சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது
Updated on
1 min read


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. நாள்தோறும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இதனால், சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 13,941 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரை 89,561 பேருக்கு கரோனா பாதித்த நிலையில், 73,681 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்து 1939 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் சென்னையில் சுமார் 12 ஆயிரம் மாதிரிகள் கரோனா சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதித்த நோயாளிகளில் 58.22% பேர் ஆண்கள், 41.78% பேர் பெண்கள் ஆவர்.

சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (வியாழக்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 450

2. மணலி 206

3. மாதவரம் 354

4. தண்டையாா்பேட்டை 723

5. ராயபுரம் 933

6. திரு.வி.க.நகா் 1,131

7. அம்பத்தூா் 926

8. அண்ணா நகா் 1,656

9. தேனாம்பேட்டை 1,176

10. கோடம்பாக்கம் 2,029

11. வளசரவாக்கம் 701

12. ஆலந்தூா் 566

13. அடையாறு 1,157

14. பெருங்குடி 403

15.சோழிங்கநல்லூா் 331
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com