ஆடி மாதத்தில் கோவில்களில் நடக்கும் முளைக்கொட்டு உற்சவம், கஞ்சிக்கலயம் வைபவம் போன்ற விழாக்களை நடத்தவும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதமே பணியை தொடங்கி தயாரிக்கப்பட்டுள்ள முளைப்பாரிச் சட்டிகள், கஞ்சிக்கலயங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ஆடி மாதம் பிறந்துவிட்டால் இங்கு வந்து முளைப்பாரிச்சட்டிகள், கஞ்சிக்கலயங்களை வாங்கிச் செல்வார்கள். ஆவணி மாதம் கடைசிவரை கூட முளைக்கொட்டு உற்சவங்கள் நடத்தப்படும். மக்கள் கூடுவதை தவிர்க்க கோவில் விழாக்கள் நடத்தப்படாததால் திருவிழா தொடர்பான மண்பாண்டப் பொருள்களும் விற்பனையாவது கிடையாது.
இனி வரும் நாள்களில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி கோவில்களை திறந்து விழாக்களை நடத்த அனுமதித்தால் மேற்கண்ட பொருள்கள் விற்பனையாவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கபடுமா என்பது தெரியாத நிலையில், இந்தாண்டு முளைப்பாரிச் சட்டிகள், கஞ்சிக்கலயங்கள் விற்பனையாவதற்கு வாய்ப்பில்லை என்றார்.