கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சேலம் மேற்கு மாவட்ட மதிமுக  சார்பில் சங்ககிரியில் ஆர்ப்பாட்டம் 

சேலம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரியில் மாவட்டச் செயலர் ந.மகேந்திரவர்மன் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர்
Updated On :27 ஜனவரி 2024, 5:00 pm

DIN

சேலம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரியில் மாவட்ட செயலர் ந.மகேந்திரவர்மன் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு சங்ககிரி மதிமுக நகர அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். 

சங்ககிரி மேற்கு மதிமுக தொழிற்சங்கத் தலைவர் இளங்கோவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.சங்கர், சங்ககிரி நகரச் செயலர் எம்.கதிர்வேல்,பொறியாளர் சுரேஷ்குமார், மகளிரணி நிர்வாகி விஜயா, நிர்வாகிகள் தங்கவேல், சுகவனம், அண்ணாதுரை, கந்தசாமி, பழனிசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,  மாநில உரிமைகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது,  பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக்கூடாது, நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், சேலத்தில் எட்டு வழிச்சாலையை விவசாய நிலங்களில் அமைக்கக் கூடாது, மின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.