கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஆதித்தமிழர் பேரவை சார்பில் சங்ககிரியில்  ஆர்ப்பாட்டம் 

சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
Updated On :27 ஜனவரி 2024, 5:00 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பேத்கார் இல்லத்தை சேதப்படுத்தியத்திற்கு கண்டனம் தெரிவித்தும், அம்பேத்கரின் இல்லத்தை தேசிய நினைவுச்சின்னமாக மத்தியரசு  அமைக்க வலியுறுத்தியதும், அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும்,  பிற்படுத்தப்பட்ட மாணவர்களின்  இட ஒதுக்கீட்டை   ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

சங்ககிரி ஒன்றியச் செயலர் ப.ரமேஷ் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.மாவட்ட கொள்கை பரப்புச் செயலர் எஸ்.ரவிசுப்ரமணியன், மாநில தொழிலாளர் பேரவை துணைச் செயலர் வே.மு.சந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். 
மாவட்ட துணைத்தலைவர் பி.பச்சமுத்து, நிர்வாகிகள் பி.அன்பழகம், மோகன்குமார், பாலமுருகன், வடிவேல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

இதேபோன்று மகுடஞ்சாவடியில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துரை.சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் ஒ.மாரிமுத்து, வே.மு.சந்திரன், ரவிசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.