பாசனத்திற்காக ஆக.1 ஆம் தேதி பவானிசாகர் அணை திறப்பு: முதல்வர் உத்தரவு
பாசனத்திற்காக ஆக.1 ஆம் தேதி பவானிசாகர் அணையை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


பாசனத்திற்காக ஆக.1 ஆம் தேதி பவானிசாகர் அணையை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் முதல் போக பாசனத்திற்கு 1.8.2020 முதல் 28.11.2020 வரை 120 நாள்களுக்கு 8812.80 மி.கன அடி தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுளளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...