வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள்: நடிகை விஜயலட்சுமி

தன்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள் என்று நடிகை விஜயலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
நடிகை விஜயலட்சுமி
Updated On :28 ஜூலை 2020, 10:14 am

DIN

தன்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள் என்று நடிகை விஜயலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. மேலும் ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். 

உடனடியாக அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன்பு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுயிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் அண்மையில் விசாரணை நடத்தினார்.

அதன்அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து தன்னை வெளியேற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதற்கான காரணம் புரியவில்லை. 

மூச்சுவிட சிரமமாக இருந்த நிலையிலும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள். சீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு பின்னால் அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை. நான் நாடகம் எதுவும் போடவில்லை. காயத்ரி ரகுராம் என் அனுமதியே இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளார். அன்று எனக்கு ஆதரவாக இருந்து காயத்ரி ராகுராம் தற்போது என்னுடன் இல்லை என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.