
கரோனா நிவாரணம் வழங்கக்கோரி இடதுசாரிக் கட்சிகள் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொது முடக்கக் கால நிவாரண உதவியாக அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் கடனாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே இடதுசாரிக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் மு. மாதவன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.