கிருஷ்ணகிரியில் ஜல்லிக்கட்டு காளை துன்புறுத்திக் கொலை

கிருஷ்ணகிரியில் ஜல்லிக்கட்டு காளை துன்புறுத்திக் கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 
கிருஷ்ணகிரியில் ஜல்லிக்கட்டு காளை துன்புறுத்திக் கொலை
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் ஜல்லிக்கட்டு காளையைத் துன்புறுத்திக் கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

பாப்பாரப்பட்டியில் வெற்றிவேல் என்பவர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். இந்தக் காளை கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் எருது ஓட்டத்தில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்தக் காளை உயிரிழந்தது. இந்த காளையை வெற்றிவேல் தனது சொந்த இடத்தில் அடக்கம் செய்தார். இத்தகைய நிலையில் இளைஞர் ஒருவர், ஜல்லிக்கட்டு காளையைத் துன்புறுத்துவது போலவும் அதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது போலவும் விடியோ பதிவுகள் சமூக வலைத்தளத்தில் பரவியது. 

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறையின் கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குனர் சி. இளங்கோவன், காளை உயிரிழப்புக்குக் காரணமான இளைஞர் மீது பிராணிகள் வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் லோகேஷ் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்தனர்.

இத்தகைய நிலையில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கால்நடை மருத்துவ குழுவினர் உதவி இயக்குனர் மரிய சுந்தர், கால்நடை நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் அருள்ராஜ், உதவி மருத்துவர்கள் சாமிநாதன், வேலன், பிரேம்குமார், போதி ராஜ் ஆகியோர் புதைக்கப்பட்ட காளையின் உடலை, இயந்திரத்தின் மூலம் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனையை நிகழ்விடத்திலேயே மேற்கொண்டனர். 

உயிரிழந்த காளையின் ஈரல் போன்ற உடல் உறுப்புகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளனர். ஆய்வகத்தின் முடிவுக்குப் பிறகே காளையில் உயிர் இழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com