
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு தினங்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களின் பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு தினங்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.