
சென்னை: உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள் என்று சீன எல்லையில் உயிரிழந்த தமிழக வீரர் மரணத்திற்கு மநீம தலைவர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய சீன ராணுவப் படை வீரரகளுக்கு இடையே எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சண்டையில், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி செவ்வாயன்று உயிரிழந்தா.ர். அவரது மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள் என்று சீன எல்லையில் உயிரிழந்த தமிழக வீரர் மரணத்திற்கு மநீம தலைவர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.