தனியார் பேருந்தில் இலவச பயணம்: பயணிகள் பாராட்டு

சீர்காழி பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் தனியார் பேருந்து கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி இன்று (புதன்கிழமை) முதல் இலவசமாக பேருந்து சேவையை இயக்கி வருகிறது.
இலவச பேருந்து சேவை புரியும் தனியார் பேருந்து. பேருந்து.
இலவச பேருந்து சேவை புரியும் தனியார் பேருந்து. பேருந்து.
Published on
Updated on
1 min read

சீர்காழி:  சீர்காழி பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் தனியார் பேருந்து கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி இன்று (புதன்கிழமை) முதல் இலவசமாக பேருந்து சேவையை இயக்கி வருகிறது.

கரோனா தீநுண்மீ பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து சேவைகள் 60 சதவிகித பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு 9ஆம் தேதி முதல் தனியார் பேருந்து சேவைகளும் இயக்கப்பட்டது. 

முகக் கவசம் அணிந்து வரும் பயணிகளை மட்டும் அனுமதித்து 60 சதவீத பயணிகளை கொண்டு தனியார் பேருந்துகளை இயக்கிட அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஒரே மண்டலத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்க வேண்டும் என்றது. இது போன்ற பல்வேறு காரணங்களால் பேருந்துகள் இயக்கினால் உரிய வருவாய் இன்றி நஷ்டம் ஏற்படும் என்பதால் சீர்காழி - சிதம்பரம் - மயிலாடுதுறை வழிதடத்தில் பல்வேறு  தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் சிதம்பரம் - சீர்காழி, பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் தனியார்  பேருந்தை, கரோனா பொது முடக்கத்திலும் தங்களது பயணிகளுக்கு உதவிடும் வகையில் இயக்க நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக புதன்கிழமை 17ஆம் தேதி முதல் வரும் 24ம்  தேதி வரை 8 நாள்கள் கொள்ளிடம் சீர்காழி, பட்டவர்த்தி, மயிலாடுதுறை வரை இயக்கப்படும். இந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு  டிக்கெட் ஏதுமின்றி இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகள் (60 சதவிகிதம் மட்டும்) அமரவைத்து பேருந்து சேவை  இயக்கப்படுகிறது.

கரோனா பொது முடக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்திடும் தனியார் பேருந்தின்  சேவையை சீர்காழி,  கொள்ளிடம், பட்டவர்த்தி, மயிலாடுதுறை பகுதி பயணிகள்  பாராட்டி வரவேற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com