தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போடியில் கடனுக்கு ஜாமீன் கொடுத்தவரை குடும்பத்துடன் கடத்தி துன்புறுத்திய 5 பேர் கைது

போடியில் கடனுக்கு ஜாமீன் கொடுத்தவரை குடும்பத்துடன் கடத்தி துன்புறுத்திய 5 பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

போடியில் கடனுக்கு ஜாமீன் கொடுத்தவரை குடும்பத்துடன் கடத்தி துன்புறுத்திய 5 பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போடி போஜன் பார்க், சேதுராமன் நகரில் வசிப்பவர் இமானுவேல் ராஜ்குமார் (52). இவர் சிதம்பரத்தில் பல்கலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜூடி ஜெனிதா. இவர் போடி அரசு பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இமானுவேல் ராஜ்குமாரின் நண்பர் முத்துவேல் என்பவர் சின்னமனூர் அருகே கோட்டூரை சேர்ந்த கிருபானந்த தயாநிதி (45) என்பவரிடம் ரூ.43 லட்சம் கடன் வாங்கியிருந்துள்ளார். இந்த கடனை முத்துவேல் கட்ட முடியாத நிலையில் இமானுவேல் ராஜ்குமார் மேற்படி தொகைக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டாராம்.

இதில் அவரும் தராததால் கிருபானந்த தயாநிதி, இவரது மனைவி மணிமேகலை (38), ராயப்பன்பட்டியை சேர்ந்த தில்பிரசாத் (36) மற்றும் 7 பேர் சேர்ந்து ஜூன் 7 ஆம் தேதி இமானுவேல் ராஜ்குமார், இவரது மனைவி, மகள் ஆகியோரை கடத்திச் சென்று கோட்டூரில் உள்ள தோட்டத்தில் வைத்து தாக்கியும், ஜூடி ஜெனிதா அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டும், அவரை தாக்கியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இவர்களிடமிருந்து தப்பி வந்த இமானுவேல் ராஜ்குமார் இதுகுறித்து ஜூன் 14 ஆம் தேதி போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்த காவல்துறை இந்த வழக்கில் தொடர்புடைய தேனி அரண்மனைபுதூரை சேர்ந்த சாலமன் ராஜா என்ற கண்ணன் (36), போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த பார்த்தசாரதி (36), தேனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பாலமுருகன் (40), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (42) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.