அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா தொற்று இல்லை: சுகாதாரத் துறை விளக்கம்
தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.


தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை, அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கரோனா பரிசோதனை முடிவை வெளியிட்டுள்ளது.
அதில், அவருக்கு கடந்த 18 ஆம் தேதி கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து 19 ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் வந்ததாகவும் அதில் சி.வி. சண்முகத்துக்கு கரோனா தொற்று இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழக சுகாதாரத் துறை பரிசோதனை முடிவுகளுடன் கூடிய இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...